கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேம்பு மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்குவேம்பு மெடிக்கல் நிறுவனர் செந்தில் குமரன் வரவேற்றார். ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், தலைவர் ராஜசேகர் துவக்கி வைத்தார்.செயலாளர் சரவணன்,பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.
முகாமில் மருத்துவர்கள் பிரபாகரன், சிந்துஜா ஆகியோர் தலைமையில், இலவச தோல், காது, மூக்கு, தொண்டை, சிகிச்சை மருத்துவத் துறை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். தேவைப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், உறுப்பினர்கள்,மற்றும் வேம்பு மெடிக்கல் ஊழியர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *