முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர். செந்தில் குமார்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா பல்லாரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
இராமநாதபுரம் மே.11
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 852ம்ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து மத நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர் என்பது நமது மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் ஜாதிகள் இல்லை. மதங்கள் இல்லை. மொழிகள் இல்லை. இனங்கள் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து இந்திய ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் முன்னிலை வகிக்கிறது.
சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலை நடைபெற்ற மதநல்லிணக்க சந்தனக் கூடு திரு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 852ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஏப்18-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தொங்கியது.
ஏப்27ந்தேதிஅடிமரம் ஊன்றப்பட்டது ஏப்28 தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றமும் நடந்தது. மே11அதிகாலை 4:00மணிக்கு ஏர்வாடி முஜாவிர் நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதாயத்தினரும் இழுத்து வந்தனர் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக்கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர்.
தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மே 18-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அஹமது இப்ராஹிம் துணைத் தலைவர் முஹம்மது சுல்தான் செயலாளர் ஜாகிர் உசேன் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மகாசபை உறுப்பினர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் இருவரின் உத்தரவின் பேரில்
ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஹபிபூர் ரஹ்மான் கீழக்கரை வட்டாட்சியர் ராம்சுப்பு இராமநாதபுரம் கோட்ட ஆய அலுவலர் ஜலால் முகம்மது கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஆனந்த் கீழக்கரை உட்கோட்டா உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷரோதே தலைமையில் ஏர்வாடி தர்கா காவல் ஆய்வாளர் ஜெய சங்கர் மேற்பார்வையில் ஏர்வாடி தர்கா காவல் சார்பு ஆய்வாளர் அருள் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சீருடை அணியாத போலீஸ் சமூகவிரோதிகள் நடமாடத்தை ரகசியமாக கண்காணித்து தனிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செய்து வந்தார்கள்.