சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. விஷ்ணு பிரபு, அதன் பின்னர் முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

மேலும் அந்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்தும், தமிழ்நாடு மற்றும் பப்புவா நியூ கினியா நாடு இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்தும் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார். இந்தச்சந்திப்பின் மூலம் தமிழ்நாடு மற்றும் பப்புவா நியூ கினியா இடையே வரத்தக உறவு மேம்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *