தூத்துக்குடி சிஎம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் நடத்தும் 2ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கைப்பந்து கழக தலைவர் உதயசங்கா் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து 2 நாள் போட்டி சின்னமணிநகா் சிஎம்என் பாா்க்கில் நடைபெற்றது.


பாிசளிப்பு விழாவிற்கு கவுன்சிலா் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான்வசீகரன் செயலாளர் ரமேஷ்குமாா் துணைத்தலைவர் நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அபிலாஷ் வரவேற்புரையாற்றினார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முதலிடம் பிடித்த மாரி பாய்ஸ் கிளப் அணிக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசு மற்றும் உதயசங்கர் நினைவு கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த சென்னை பனிமலர் அணிக்கு ரூ. 25,000 மற்றும் கோப்பையும், 3ம் இடம் பிடித்த தூத்துக்குடி கால்டுவெல் வாலிபால் கிளப் அணிக்கு ரூ 20000 மற்றும் கோப்பையும், 4ம் இடம் பிடித்த கோவில்பட்டி லயன்ஸ் வாலிபால் கிளப் அணிக்கு ரூ 15000 மற்றும் கோப்பையும் வழங்கி மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இருந்து வருகின்றன.

அதில் துடிப்பு மிக்க இளைஞர்கள் பங்கெடுத்து விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் ஸ்டாலின் எல்லா விளையாட்டுகளையும் ஊக்குவித்து கௌரவித்தாா். இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் மன தைாியம் ஆரோக்கியம், கிடைக்கும் தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை அடுத்த 3 அல்லது 5 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பாா்வையுடன் சிந்தித்து எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் புதிய பூங்காக்கள் நடைபயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவதற்கு வசதியாக ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

தூத்துக்குடிகாரங்க பாசமானவா்கள் அன்புக்கு கட்டுப்படுவாா்கள். அனைவரும் எல்லா ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஏதாவது விளையாட்டு போட்டியை தோ்ந்தெடுத்து விளையாடுவது நல்லது என்று பேசினாா். பின்னா் சிறந்த விளையாட்டு வீரா்களுகளை ஊக்குவிக்கும் வகையில் கோப்பைகள் பாிசுகள் வழங்கப்பட்டது


விழாவில் தொழிலதிபா் பி.எஸ்.டி.எஸ் வேல்சங்கர், சிம்எம்என் ஆண்கள் கைப்பந்து கிளப் தலைவா் ராஜா, செயலாளர் சச்சின்பெல், பொருளாளா் அருண்குமாா், துணைத்தலைவர்கள் மணிகண்டன், அஸ்வின்குமாா், துணைச்செயலாளா்கள் பாலகணேஷ், மோகன்குமாா், கௌரவ ஆலோசகா்கள் ரமேஷ் காா்த்திகேயன், ரமேஷ், காளிராஜன், தனபால், முருேகசன், புஷ்பராஜ், லெலின் பெல், காா்த்திக்குமாா், திமுக வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா் லிங்கராஜா, உள்பட விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *