திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் நேற்று மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்துள்ளது இந்த நிலையில் நேற்று இரவு திருவிழாவை காண எட்டியலூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சந்தோஷ் (23 )இவர் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

அங்கு பணியாற்றும் கடை ஊழியருடன் திருவிழா காவடியாட்டம் பார்க்க சென்றுள்ளார்.அப்போது வண்டாம்பாளை கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் ஆடிய போது ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் மீது கடுமையாக தாக்கியதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அங்கு ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் என் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *