திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ.திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும், மூலவருக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கோரையற்றங்கறையில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலத்துடன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பூகரகம் கொண்டுவரப்பட்டு தீ மிதியில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

அதனை தொடர்ந்து திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *