முதுகுளத்தூர் நிருபர்
ஆர்.செந்தில் குமார்
முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன்களை உரியவர்களிடம் வழங்கப்பட்டன
முதுகுளத்தூர் மே10
ராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் உட் கோட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் செல் போன் தொலைந்தது சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்களில் முதுகுளத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவுப்படி முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா தலைமையில் செல்போன் காணாமல் போனது சம்பந்தமாக பெறப்பட்ட மூன்று மனுக்களுக்கும்
மனு ரசீது
பதிவு செய்து காவல் முதுகுளத்தூர் நிலைய சார்பு ஆய்வாளர் பிரசாத் மற்றும் போலீசார் மேற் படி தொலைந்த மூன்று செல்போன்கள் பற்றிய தகவல்களை சேகரித்து தொலைந்து போன மூன்று செல்போன்களையும் கண்டறிந்து முதுகுளத்தூர்
உட்கோட்ட துணை காவல் கண் காணிப்பாளர் சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் வட்ட காவல் ஆய்வாளர் இளையராஜா முன்னிலையில் பூ அன்பரசன், தர்மராஜ்,
கற்பகவள்ளி ஆகியோர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.