ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தருமபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டிவட்டம், பையர்நத்தம்கிராமத்தில் எழுந்தருளியுள்ளஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில், திருவிழா நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி யளவில் வான வேடிக்கைகளுடன் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு திருநங்கைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று மாலை சாமி ஊர்வலம் வானவேடிக்கையுடன் நடைபெறும் நாளை புதன்கிழமை காலை 5 மணி யளவில் வான வேடிக்கையுடன் டாக்டர் குமரன் மரகதம் ஆசிரியை பெருமையுடன் வழங்கும் சேலம் பிரபுவின் தாரை தப்பட்டையுடன் அலகுகள் குத்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுத்து சாமி ஊர் பவனியுடன் காளியம்மன் சன்னதியை வந்தடையும் இதனைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் RJB ஜான்சன் பாபு மற்றும் நடராஜன் பெருமையுடன் வழங்கும் தென்னகப் புகழ் வர்மாவின் தில்லை தாண்டவ் திரைப்பட நடன குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறும் இதனை தொடர்ந்து மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி யளவில் Dr.ரமேஷ் பொம்மிடி பலூன் திரையரங்க உரிமையாளர் பெருமையுடன் வழங்கும் T.T.DANCE அகாடமி தென்னக புகழ்-லின் மாபெரும் நடன நிகழ்ச்சி நடைபெறும் இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று இரவு ஸ்ரீ மாரியம்மன் கோயில் அருகில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்று விழா நிறைவுறும் என்று விழா குழுவினர் பார்த்திபன் மணியக்காரர் .கோவிந்தன் வாரியான் .மாதன் பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்