கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து வரலாற்று சாதனை

தேனி மாவட்டம் கம்பம் கே ஆர் நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட மக்களின் நன் மதிப்பை பெற்ற ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரி க் மேல்நிலைப்பள்ளி அரசு பொது தேர்வுகளில் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வில் இப்ப பள்ளி மாணவி பி. விதர்ஷனா 600 க்கு 589 மதிப்பெண்கள் பெற்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் .

இதேபோல் இந்தப் பள்ளியின் மாணவ மாணவிகள் எஸ். ஜெஸ்சி 600க்கு 575 மதிப்பெண்ணும் ஜி. ஹரி கிருஷ்ணா 600 க்கு 574 மதிப்பெண்களும் எம் அபிநயா 600 க்கு 571 மதிப்பெண்களும் எம் கமலி பிரியதர்ஷினி 600க்கு 5 69 மதிப்பெண்களும் பி . மதி பாலன் எம் சாதனா ஸ்ரீ ஜெ‌ சரண் ஜித் எஸ் சந்தோஷ் ஆர் கிருத்திக் ஆகிய மாணவ மாணவிகள் கம்ப்யூட்டர் சயின்சில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்தனர்

மேலும் இந்தப் பள்ளியில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் 100% தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர் 500 .550 மதிப்பெண்களுக்கு மேல் 27 மாணக்கார்களும் 400. 500 மதிப்பெண்கள் பெற்று 29 மாணாக்கர்களும் மதிப்பெண்கள் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் உயர் கல்வி பெற தகுதி பெற்றுள்ளனர்

கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தில் ஒருவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார் வரலாற்று சாதனை படைத்த மாணவ மாணவர்களையும் பள்ளி ஆசிரியர் பெருமக்களையும் முதல்வர் ஆகியோரை பள்ளியின் நிர்வாக இயக்குனர் கே ஆர் சௌந்தர்ராஜன் தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் மனதார பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முது நிலை முதல்வர் சுவாதிகா பள்ளியின் மேலாண்மை இயக்குனர் கே ஆர் ஜெய ஷிவானி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *