நீட் தேர்வு எனும் நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடு ஈடுபடுதல் பாட புத்தகங்களில் இல்லாத கேள்விகளை கேட்பது என மருத்துவத்துறையில் ஒன்றிய அரசாங்கம் அநியாயத்தை அரங்கேற்றி வருகிறது அதன் ஒரு பகுதியாகவே வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்

தற்போது நீட் தேர்வு முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும் கடந்த காலங்களில் எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று நினைக்கும் பொழுது மாணவச் செல்வங்கள் வாழ்வாதாரம் மருத்துவர்கள் கனவு எவ்வாறு ஒன்றிய அரசாங்கத்தால் சூறையாடப்பட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கையில் நெஞ்சமே பதறுகின்றன எனவே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்க வேண்டும் முறைகேடுகளுடன் அரங்கேறும் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி தெரிவித்து உள்ளார்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *