மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில்

தூத்துக்குடி கடல் எல்லைக்குள் மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி கேரள மீனவர்கள் விடைபடகு மூலம் அத்துமீறி உள்ளே நுழைந்து கடந்த சில நாட்களாக மீன்களை பிடித்து செல்வதாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு தூத்துக்குடியை சார்ந்த விசைபடகு மீனவர்கள் அத்துமீறி தூத்துக்குடி எல்கைக்குள் மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16-பேரை படகுடன் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி
எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்த 16-கேரள மீனவர்களிடம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *