தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் ஆய்வு பேருந்துகளை பாதுகாப்பாக விபத்தின்றி இயக்குவது குறித்து பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 67 பள்ளிகள் உள்ளன இந்த 67 பள்ளிகளில் சுமார் 235 பேருந்துகள் இயக்கப்படுகின்றன ஆண்டுதோறும் பள்ளி தூங்குவதற்கு முன்பாக இந்த பேருந்துகளை முறையாக பராமரித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்ற பின்பே பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்

அந்த வகையில் இன்று தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜேந்திர குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார் இதில் பள்ளி பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்து பயணம் மேற்கொள்வது மேலும் பேருந்துகளில் வேக கட்டுப்பாடு கருவி சிசிடிவி கேமரா அவசர வழி மற்றும் இருக்கை வசதிகள் 16 வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் இந்த 16 வகையான பாதுகாப்பை முறையாக செய்துள்ள பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்

இந்த ஆய்வில் சுமார் 236 க்கும் மேற்பட்ட பேருந்து பள்ளி பேருந்து ஓட்டுனர் கலந்து கொண்டனர் இவர்களுக்கு முன்னதாக தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கி வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி கோமதி அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *