கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் அசோகன், துணைச்செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாநில ஆலோசகர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் புதிய முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில், தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள… கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்த வேண்டும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருதி முதல்வர் கேபில் டிவி துறையில் ஏற்படுத்த உள்ள, புதிய மாற்றங்களுக்கு, டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் மற்றும் அதன் உறுப்பினர்களின் ஆதரவைவும், ஒத்துழைப்பையும் தருவதாகவும், தமிழக முதல்வர் அறிவிக்கும் திட்டங்களை உள்ளுர் கேபிள் டிவி நிறுவனத்தின், டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் போர் வீரர்களாக செயல்பட்டு, அனைத்து நல திட்டங்களையும் TACTV சந்தாதாரர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல பாடுபடுவோம் எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் மிகக்குறைந்த கட்டணத்தில் நிறைந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளை வழங்கிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *