கார் – லாரி மோதி விபத்து:காவலர் உள்பட 6 பேர் பலி.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் – லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவிலில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி உள்ளது. திருப்பூர், கரூர் மாவட்ட எல்லையான இந்த இடத்தில் காவல்துறை சோதனைச் சாவடி உள்ளது. சாலையோரம் இந்த சோதனைச் சாவடி உள்ளது.
அதிகாலை நேரத்தில் போலீஸார் பணியில் இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி, பின்னர் காவல்துறை சோதனைச் சாவடி மீதும் மோதின.இந்த விபத்தில் ஒரு காவலர், கார் பயணிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.