திருச்சி திருவானைக்காவில் கீழ்கொண்டயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அம்பிகா, வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து அம்பிகா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *