​இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைந்து, அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் வழக்கம்போல் இந்த ஆண்டும் 117 இடங்களில் இரத்ததான முகாம்களை வெகு சிறப்பாக நடத்தின. பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்ட இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான யூனிட் இரத்தம் பெறப்பட்டது.


​இதன் ஒரு பகுதியாக, 80-ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம், கோட்டை புதூர் கிளையின் சார்பில் சிறப்பு இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் 26 பெண்கள் உட்பட மொத்தம் 73 யூனிட் இரத்தம் தானமாகப் பெறப்பட்டது. அவசர கால இரத்தத் தேவை மற்றும் தொடர்ச்சியான முகாம்கள் மூலம் இரத்ததான சேவையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக, ஒன்றிய அரசின் ‘தேசிய இரத்த மாற்றுக் குழு’ (NBTC) சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமைக்கு இந்த ஆண்டு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


​கோவை கோட்டை புதூரில் நடைபெற்ற இந்த முகாமிற்கான ஏற்பாடுகளைக் கிளைத் தலைவர் அப்துர் ரஹீம், கிளை மருத்துவ சேவை அணி ஜான்ஷா, கிளைச் செயலாளர் தன்ஷீர், கிளைத் துணைத் தலைவர் ஹக்கீம், கிளை மாணவரணி ஜாஷீர், கிளைத் தொண்டரணி முஸ்பீர் மற்றும் கிளை வர்த்தக அணி சதாம் ஹுசைன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். மேலும், இந்நிகழ்விற்கு மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளர் M. நிஜாமுதீன், மாவட்டத் தலைவர் TA அப்பாஸ், மாவட்டத் துணைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சல்மான் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *