நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக குழு மகேந்திரன் தலைமை தாங்கினார்.
கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாசன வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யு.சி ஒன்றிய செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.