கோவையில் செயல்பட்டு வரும் , இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனம் அடுக்கு மாடி மற்றும் வில்லா டைப் வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றனர்..

இந்நிலையில் கோவை சத்தி பிரதான சாலையில், இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான “இன்ஃபினியம் ஆல்டிட்யூட்” துவக்க விழா நடைபெற்றது..

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

விழாவில் இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார். இயக்குநர் கார்த்திகேயன், துணைத் தலைவர் ஆதர்ஷ் குகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

இன்ஃபினியம் ஆல்டிட்யூட் அடுக்கு மாடி திட்டம் ”நவீன வசதிகள், இயற்கை சூழலுடன் இணைந்த வாழ்வியல் அமைப்பு மற்றும் உயர்தர கட்டமைப்புகளுடன் இந்த குடியிருப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்..

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், கோவையில் உயர்தர வாழ்க்கை முறைக்கு புதிய அடையாளமாக இந்த திட்டம் அமையும் என பாராட்டினர். நிகழ்ச்சியின் போது திட்டத்தின் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *