திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் தேர்தலில் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் தனியார் திருமண அரங்கத்தில் நடைபெற்றது அப்போது பேசிய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தோல்விக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது மன்னார்குடி மண்ணுக்கு புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம் , நான்கு வழிச்சாலை, அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி, புதிய அரசு அலுவலகங்கள் , உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பெருமை சேர்த்தவர் தான் டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடி தொகுதி மக்கள் புரிந்து கொள்ளாமல் வாக்களித்துள்ளார்கள் எனக் கூறி கண் கலங்கினார்.
அதனை கண்டு நான் தொலைபேசியில் பேசினேன் அப்போது மன்னார்குடி இன்றைக்கு எல்லா திட்டத்திலும் முன்னுதாரணமாக இருப்பதற்கு காரணம் நீங்கதான் அரசியலில் நாம் இருவரும் தனித்தனியாக பயணித்தாலும் மக்களுக்கான பணியில் இருவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுகிறோம் எனவும் இனி நாம் அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு நண்பர்களாக இருப்போம் நீங்கள் கண்கலங்கியதை பார்க்கும் போது நான் உங்களுக்கு இந்த தொகுதியை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என வருத்தத்துடன் தெரிவித்ததாக காமராஜ் தெரிவித்தார்.