12ம் வகுப்பு பொது தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை கட்டி அனைத்து பாராட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்…..
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த வெள்ளிகிழமை முடிவுகள் வெளியிடப்பட்டன. திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரியில் மாவட்ட அரசு மாதிரி ப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2025 – 2026 ம் ஆண்டில் 100% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவர்கள் யுகன். நித்யா ஆகியோர் 572 / 600 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர் இந்த மாணவர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் , முதன்மை கல்வி அலுவலர்கள். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பாராட்டினார்கள்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் , மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் கட்டி அனைத்து பாராட்டி இனிப்புகள் வழங்கினார்கள்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில் கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியில் மாவட்ட அளவில் இரண்டு மாணவர்கள் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் உயர்கல்வி படித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் கடைசி காலம் வரை கல்வியை மட்டுமே நம்பி படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் ஆசிரியர்கள் எங்களை சிறப்பாக வழிநடத்தி படிக்க வைத்தார்கள் அதனால் தான் அரசு பள்ளியி ல் படித்து முதலிடம் பிடித்தோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.