குறிஞ்சிப்பாடி வட்டம்
வடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது,
இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது அதற்காக ரூபாய் 2 கோடியே 94 லட்சத்து 72 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய காவல் நிலையகட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது
இதனை கூட்டி தற்காலிக காவல் நிலையம்,வடலூர் சினிமா தியேட்டர் செல்லும் வழியில் உள்ள வடலூர் நகராட்சி திருமண மண்டபமாக அண்ணா திருமணம் மண்டபத்தில் வடலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பழைய காவல் நிலையத்தை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளப்பட்டது,ரூபாய் மூன்று கோடியில் கட்டப்படும் இந்த காவல் நிலையத்தில் அனைத்து வசதிகளும் கூடிய காவல் நிலையமாக இது அமையும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்தது வடலூர்அண்ணா திருமண மண்டபத்தில் இயங்கும்
தற்காலிக காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்காக தொடர்புகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் கூறினார்கள்