வடலூர் மே.15:வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் 70 ;இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி பாசமலர் இவர்களுக்கு சரவணகுமார் என்ற ஒரு மகன் உள்ளார் அவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும் கடந்த ஆண்டு சரவணக்குமாருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார் இந்நிலையில் சுகன்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார் இதனால் மருமகளை பார்ப்பதற்காக வேலாயுதம் மற்றும் மனைவி பாசமலர் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி அமெரிக்கா சென்று உள்ளனர்.

மேலும் தனது இல்லத்தை அவருடைய தம்பி மனைவி பூங்காவனம் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டின் சாவியை கொடுத்து பாதுகாத்து வருமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல வீட்டுக்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளார் மேலும் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க பல்ப் அணைக்கப்பட்டு உள்ளே உடைப்பது போன்று சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 6 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர் இதை அடுத்து கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *