மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நேற்று திடீரென்று உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மதுரை மத்திய சிறைச்சாலை அருகே அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு விலை உயர்விற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் பயன்படுத்திய பழைய டயர்களை சாலையில் உருட்டி, தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. உடனடி யாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *