திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் தலைமையில்
தொடர்ந்து தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளதையும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் மேலும் அவர் நீடூடி வாழ வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து திருக்கோயிலுக்கு வருகை தந்த நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
இதனை தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனாரை வரவேற்று திருக்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இதனை தொடர்ந்து திருகோயிலில் தமிழக முதலமைச்சர் பெயரில் தங்கத்தேர் பதிவு கட்டணம் செலுத்தப்பட்டு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் நகரச் செயலாளர் மீதுன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் பெயரில் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த நிகழ்ச்சி கட்சி நிர்வாகிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றனர்..