கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்
தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள விருக்ஷம் யோகாலயா சார்பாக யோகவில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது..
விருக்ஷம் யோகாலயாவின் நிறுவனர்கள் ரூபிகா மற்றும் பவ்யாஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,ஐந்து வயது முதல் பதினான்கு வயது வரையிலான சிறுவர் சிறுமிகள் இரு குழுக்களாக பங்கேற்றனர்..
இதில், பிரயாண் நாயர்,சிவஜித் மற்றும் ரியா சாய் ஆகிய மூவரும் கர்பாசனம்,புஜங்காசனம்,மற்றும் மச்சாசனம் ஆகிய மூன்று ஆசனங்களை 32 நிமிடங்கள் தொடர்ந்து செய்து கவனம் ஈர்த்தனர்..
இதே போல 11 பேர் கொண்ட மற்றொரு மாணவர் குழுவினர்களான, மேகா, சம்யுக்தா, வர்ஷா, மகேஸ்வரி.,வேதா, தஸ்வந்த். ஆதவ் சுரேஷ், துருவ்.,வருண் ஆதித்யா நாதன் தஷ்வந்த், ஷாமிலி ஆகியோர் மரூதாசனம், திம்பாசனம், சக்ராசனம் ட்விஸ்ட், சிவலிங்காசனம், , ஏகபாத சிரசாசனம், பூர்ண சலபாசனம், பூர்ண புஜங்காசனம், உள்ளிட்ட அரிய மற்றும் சிரமமான யோகாசனங்களை ஒரு நிமிடத்தில் வேகமாக பலமுறை செய்து காண்பித்தனர்…
தொடர்ந்து உலக சாதனை செய்த 14 மாணவ,மாணவிகளுக்கும் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை யோவா உலக சாதனை நிறுவனத்தின் நிர்வாகிகள் சரவணன்,சுரேஷ்,மற்றும் ரவி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்…
இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்கும் சாதனையாளர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவசமாக பயில்வதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர இருப்பதாக உலக சாதனை நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்…