தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் விழா ஒருங்கிணைப்பாளர் ஐரீன் வரவேற்றார் முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு விழா பேரூரையாற்றி கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது உலகத்தில் உள்ள எல்லா பணிகளையும் விட ஆசிரியர் பணி போற்றுதற்குரிய சிறந்த பணியாகும், அனைத்து துறை வித்தகர்களையும் உருவாக்க சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் பணியாகும்
அந்த பணியினை இந்த இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி சிறப்பாக செய்கிறது என பாராட்டி பேசினார்.
விழாவில் குத்துக்கல்வலசை செயின்ட் மேரிஸ் பள்ளி தலைமையாசிரியர் கருப்பசாமி, திசையன்விளை சமாரியா மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (ஒய்வு) அதிசய ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
தொடர்ந்து மாணவ ஆசிரியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
கல்லூரி பேராசிரியர்கள் லீதியாள் சொர்ண ஜெயா, ராஜேஸ்வரி, ஜேபா எபனேசர், அனிதா உடற்கல்வி ஆசிரியர் ஜசக் ஜான்சன் நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன், பேதுரு லட்சுமி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர் முடிவில் பேராசிரியர் ஜெனிபர் நன்றி கூறினார் தொடர்ந்து மாணவ ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன