பேராவூரணி மே.16 –
இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் வீரையன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி. முத்துமாணிக்கம், க.அன்பழகன், கோ.இளங்கோவன், ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.நீலகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ். வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையன், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.ஜகுபர்அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஒன்றியச் செயலாளர் சி.வீரமணி, மாவட்டக் குழு கோ.பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் எம்.சித்திரவேல், கே.பெத்தையன், மதிமுக நகரச் செயலாளர் க.குமார், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி மாவட்டச் செயலாளர் இல.குமணன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், நகர அமைப்பாளர் தா.கலைச்செல்வன், திராவிடர் கழக நிர்வாகிகள் சோம. நீலகண்டன், புலவஞ்சி காமராஜ், முத்து துரைராஜ்,
ஆர்.நீலகண்டன், அ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணி நீலகண்டன்