சுரண்டை
பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது.
போட்டிகளுக்கு கயிறு இழுக்கும் சங்க தலைவர் பிளஸ்ஸி குமார் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர் . பள்ளி தாளாளர் லார்டுவின், கயிறு இழுக்கும் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பிச்சையப்பன் இணை செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் செயலாளர் பெரியதுரை வரவேற்றார் இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 55 அணிகள் பங்கேற்றன
போட்டிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கத்தின் ஸ்கை கிளப் அணிக்கு சுரண்டை தொழிலதிபர் எஸ்வி கணேசன் சார்பில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முக்முதா நகர திமுக செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அன்பழகன், வீராணம் ஷேக் ரமேஷ் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சுசிலா தீயணைப்பு துறை சிறப்பு அலுவலர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.