நாகப்பட்டினம்,மே.16-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக கோவில் எதிரில் யாக சாலை அமைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையாக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் நீர்வளத்துறை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *