நாகப்பட்டினம்,மே.16-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சௌரிராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது சௌரிராஜ பெருமாளுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சவுரிராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் புவியரசு, கணக்கர் உமா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *