போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர்செல்வம் போடி நகரில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து தனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் போடி நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் மேல் சொக்கநாத புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கண்ணன் காளி ராமசாமி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி பி ஏ மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்