தருமபுரி – ஆகஸ்ட்1 8

தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் மாநில துணைச் செயலாளர் பூபதி ஆகியோருக்கு மாவட்ட எல்லையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

இதை தொடர்ந்து அதியமான், அவ்வையார், மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தர். பின்னர் பழைய தருமபுரியில் அமைந்துள்ள புதிய மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நெல்லை சிவா கலந்துகொண்டு மாவட்ட, நகர, ஒன்றிய ஆகிய பணிகளுக்கான நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் தலைமை நிலைய செயலாளர் ஞானசேகரன், மாநில துணை பொதுச்செயலாளர் பிரகாஷ் ,மாநில பொறியாளர் அணி செயலாளர் தமிழ்அழகு, மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெய்காந்த், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் குமார், முனிரத்தினம், சசிகுமார் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள்,மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *