தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ஆர் ஆர் ஆர் ஆர் இண்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவ மாணவிகள் சமீபத்தில் வெளியான சி.பி.எஸ்.ஐ பிளஸ் 2 வெளியான தேர்வு முடிவுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து சாதனை இதிலும் அறிவியல் பிரிவில் மாணவி ஹெர்த்யா 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து தேனி மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தார்
இதே போல் மாணவன் தீபக் 500க்கு 472 மதிப்பெண்களும் மாணவி பிரித்திகா 500 க்கு 462 மதிப்பெண்களும் எடுத்து வரலாற்று சாதனை படைத்தவர் இதனைத் தொடர்ந்து சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு பள்ளி சேர்மன் கல்வி தந்தை ஆர் ராஜாங்கம் தலைமை வகித்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஹெர்த்யாவுக்கு ரூபாய் 50 ஆயிரம் மற்றும் 10 கிராம் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கி இதேபோல் அடுத்து எழுத போகும் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று வாழ்த்தி மனதார பாராட்டினார்
அதை போல் மாணவன் தீபக்குக்கு 10 கிராம் வெள்ளி நாணயமும் உடற் கல்வி பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவி பிரித்திகாவுக்கு 20 கிராம் வெள்ளி நாணயம் வழங்கி பாராட்டினார்
இதையடுத்து வரலாற்று சிறப்பு படைத்த மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மேடையில் ஏற்றி பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது இது குறித்து பள்ளி சேர்மன் கல்வி தந்தை ஆர் ராஜாங்கம் கூறும்போது எங்கள் பள்ளியின் உலக தரம் வாய்ந்த கல்வி சூழலில் பயின்று பல்வேறு துறைகளில் மாநில மற்றும் தேசிய சர்வதேச அளவில் மாணவ மாணவிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
வெறும் ஏட்டுக்கல்வியை மற்றும் கற்காமல் உலகளாவிய சிந்தனையோடும் பன்முக திறமையோடு மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வி கற்பித்து மாணவ மாணவிகளின் அறிவாற்றல் பெருகும்படி சிறந்த ஆசிரியர்களை கொண்டு தரமான கல்வியை மாணவர்களுக்கு போதித்து வருகிறோம்.
இது மட்டுமின்றி விளையாட்டு அறிவியல் கண்டுபிடிப்பு பொது அறிவு திறன் ஆகியவற்றை மாணவ மாணவிகளுக்கு கற்பித்து தலைசிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கி வருவது எங்கள் பள்ளியின் தனிச்சிறப்பு இவ்வாறு அவர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணைச் சேர்மன் ஆர் அசோக் குமார் ஆக்டிங் சேர்மன் ஆர் ஆர் ஜெகதீஷ் பள்ளி முதல்வர் டாக்டர் பி ஆனந்த் வல்லி பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.