தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
வேம்பு மெடிக்கல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு வேம்பு மெடிக்கல் நிறுவனர் செந்தில் குமரன் வரவேற்றார். ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், தலைவர் ராஜசேகர் துவக்கி வைத்தார்.செயலாளர் சரவணன்,பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.
முகாமில் சுமார் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் சர்க்கரை அளவின்படி அவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடுகள் உணவுமுறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது”.
கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் முன்னாள் துணை ஆளுநர் உதயகுமார்,முன்னாள் தலைவர்கள் மகாராஜன் மகேஸ்வரன் கலியபெருமாள் வருங்கால தலைவர் பாபு மற்றும் உறுப்பினர்களான கோவிந்தராஜ் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.