அலங்காநல்லூர்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மதுரை மாநகர் வடக்கு மாவட்டசெயலாளர் விஜய் அன்பன் கல்லானை,புறநகர் மாவட்ட செயலாளர் விஷால்கிருஷ்ணா,ஆலோசனையின் பேரில் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,இணைச் செயலாளர் முத்து,அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ், நகர செயலாளர் ரஞ்சித் முன்னிலையில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூ.வீ.கருப்பையா கலந்துகொண்டு
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து
பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக கோவிலூர் கிராமத்துக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுக்கு கட்சி நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் இதில் பாலமேடு பேரூர் செயலாளர் புகழ், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், கார்த்திக்,மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்,வலையபட்டி கிளை நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் லாரன்ஸ், செய்திருந்தார்