திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.
கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.


கிளை தலைவர் அர்ஜுன் தலைமை தாங்கினார். DYFI திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரெ.சேதுபதி, முன்னாள் மாநில துணைத் தலைவர் பா.லெனின், மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ், மாவட்டக்குழு தோழர்கள் ஹரிஹரன், ரவி மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சாதிக், மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


சையது இப்தார், ஜோரபின், மனோஜ், வசந்த், அஸ்வாக், அமிர்தலிங்கம், ஷேக் இப்ராஹிம், அபுதாஹீர், சூர்ய பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கிளை பொருளாளர் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *