தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தொழில் பயிற்சி கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
மாணவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்கி தருவதாக உறுதிமொழி தொடர்ந்து வருடம் மே 1ஆம் தேதி மாணவர்களை சந்திப்பு என்று தலைவர் பேட்டி .
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசுதொழில் பயிற்சி எனும் ஐடிஐ கூடம் அமைக்கப்பட்டு தொடர்ந்து மாணவர்கள் அங்கு பயின்றுவருகிறார்கள் ஐடிஐ வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து மாணவர் சங்க தலைவர் பேசுகையில் தாராபுரம் ஐ டி ஐ முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு 60 ஆண்டுகாலமாக தாராபுரம் ஐடிஐ செயல்பட்டு வருகிறது இந்த ஐடிஐக்கு ஆர்ச் இல்லாமல் இருக்கிறது மாணவர்களாகிய நாங்கள் ஆர்ச் கட்ட ஏற்பாடு செய்து வருகிறோம் மேலும் நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மாணவர்கள் இங்கு பயின்று வருவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும் காத்திருக்கிறோம் இந்த ஐடிஐ படித்தவர்கள் திருச்சி பெல் கம்பெனியிலும் ஏர்போர்ட்டிலும் ரயில்வே என் எல் சி டி என் பி சி ஐ டி ஐ மேலும் தனியார் கம்பெனியில் வேலை செய்து பல மாணவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும் முன்னாள் மாணவர்கள் செயல்பட்டு வருகிறோம் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மே 1ஆம் தேதி ஒன்று கூடி அரசு ஐடிஐக்கு மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் செயலாளர் நியமித்து உள்ளோம் இங்கு பயின்ற நாங்கள் இங்கே பயிற்சி தரும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறோம் இதில் நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.