நாகப்பட்டினம்,மே.18-
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெத்தார்ண்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரவு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. காலை அக்னி கப்பரை வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் வழிபட்டு சென்றனர்.