கரூர் செய்தியாளர் மரியான் பாபு



கரூரில் செயல்படும் கூடைப்பந்து குழு ஆண்டுதோறும் மே மாதத்தில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடை பந்து போட்டி நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில் நடப்பாண்டில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான66- ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும், கேவிபி சுழற்கோப்பைக்கான 12 ஆம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் மே 21 முதல் துவங்கி மே 26 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பானவிவரங்களை தெரிவிக்க கரூர் கூடைப்பந்து குழு சார்பில் குழு தலைவர் வி.என்.சி. பாஸ்கர் தலைமையில் கரூரில் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் கூடைப்பந்து குழு பாதுகாவலர் விஜயபாஸ்கர், துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம், இந்திரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், செயலாளர் முகமது கமால்தீன், இணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த வி.என். சி.பாஸ்கர்,கரூரில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் சார்பில் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டி மே 21 ஆம் தேதி துவங்கி பகல் இரவு ஆட்டங்களாக மே 26 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்தப் போட்டிகளை கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆண்களுக்கான போட்டியில் இந்திய அளவில் தலைசிறந்த 8- அணியும், 4- பெண்கள் அணியும் பங்கேற்க உள்ளதாகவும், ஆண்களுக்கான போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையிலும் பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படும் என தெரிவித்தார்.


ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் சுழற் கோப்பையும், சான்றிதழும்,இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 80 ஆயிரம், நினைவு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழும் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 60 ஆயிரம், நினைவு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.போட்டிக்கான விரிவான ஏற்பாடுகளை கரூர் கூடைப்பந்து குழு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *