மதுரையில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது.
கோடைகால பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து மரங்கள் இல்லையெனில் மனிதன் ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் நிலை ஏற்படும் என்பதை ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரி வடிவம் கொண்டு நடித்து காண்பித்தும், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து எடுத்துக்கூறி,தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவை களை மறுசுழற்சிக்கு அனுப்பும் முன்பு அதனை கோடை காலங்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் முறையை செயல்முறை வடிவில் காண்பித்தும்,நெகிழிப்பை பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை (மஞ்சப்பை) பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.,
சிறப்பாக கலந்துரையாடல் செய்த குழந்தைகளுக்கு விதை உண்டியல் பரிசாக வழங்கி விதை உண்டிகளின் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கப் பட்டது.
மேலும் குழந்தைகளுக்கு துணிப்பை (மஞ்சப்பை) வழங்கப்பட்டது கோடை கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் சமூக ஆர்வலர் அசோக்குமார் குழந்தைகளுக்கு மரங்களின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விதைபந்து செய்யும் பயிற்சியினை வழங்கினார். மாணவ, மாணவிகள் 750 விதைப் பந்துகள் செய்துள்ளனர்.