திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என திருவாரூர் வர்த்தக சங்கத்தினர் மதுக்கடை முன்பு எச்சரிக்கை பேட்டி .

தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் பகுதியிலிருந்து 500 மீட்டருக்கு உள்ளடங்கிய டாஸ்மாக் கடைகள் அகற்ற தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடை 500 மீட்டருக்கு உள்ளே இருந்தும் மதுக்கடையை மூட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுக்கடை அருகே உள்ள வர்த்தக நடைபெறும் கடைகளின் முன்பு மது அருந்து வருவதால் பெண்கள் கடைகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளிக்கப்பட்ட எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் வர்த்தக சங்கம் சார்பில் சாலை மறியல் செய்தும் இந்த கடை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் டாஸ்மாக் மேலாளருக்கு வர்த்தக சங்கம் சார்பில் மூட வலியுறுத்திய போது அலட்சியம் செய்வதாகவும் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் கடை முன்பு கூடினர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைவர் பாலமுருகன் தெரிவித்த போது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் இல்லை என்றால் கடுமையான போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பேட்டி: பாலமுருகன் வர்த்தக சங்க தலைவர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *