மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஸ்ரீ முத்து நாயகி அம்மன் திருமண மஹாலில் பரவை ஆர்.எஸ்.பி. கன்ஸ்டரக்க்ஷன்மற்றும் தானம் அறக்கட்டளையின் பொதிகை வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் காலை 9மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில் மருத்துவர் சௌந்தர்யா நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், தானம் அறக்கட்டளையின் கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், வழிகாட்டுதல்படி மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பொதிகை வட்டார களஞ்சிய பொறுப்பாளர் ஷண்முகப்பிரியா, மற்றும் பரவை ஆர்.எஸ்.பி. கன்ஸ்டரக்ஸண் உரிமையாளர்
பிரபு மற்றும் மண்டல கணக்காளர் கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

முகாமில் அரவிந்த் மருத்துவ மனை மருத்துவர். சௌந்தர்யா அவர்கள்பரிசோதனை செய்து கண் புரை உள்ளோர்களை கண்டறிந்து அறுவை சிகிச்சை க்கு பரிந்துரை செய்தார்.முகாமிற்கான பணிகளை பொதிகை வட்டார களஞ்சிய தலைவிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதில் 25 க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.26 நபர்கள் குறைந்த விலையில் கண்ணாடி பெற்றனர்.மேலும் 15 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றவர்கள் அதிக ரத்தம் அழுத்தம், சர்க்கரை மற்றும் இருதய நோயால் பாதிக்க பட்டத்தினால் அறுவை சிகிச்சை செய்யவில்லை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *