தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியை போக்குவதில் அம்மா உணவகம் சிறப்பிடம் பிடித்துள்ளது. காலை இட்லி மற்றும் மதியம் தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.


இந்த அம்மா உணவகம் சுரண்டை நகராட்சியில் இதுவரை அமைக்கப்படவில்லை சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை அமைக்கப்படாதது ஏழைகள், கூலி வேலை பார்ப்பவர்கள், முதியோர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அம்மா உணவகத்தை சீரமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில் சுரண்டை நகராட்சி பகுதியிலும் உடனடியாக அம்மா உணவகத்தை துவக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *