சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரத்தை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளராகவும், தென்காசி தெற்கு மாவட்ட தமாகா தலைவராகவும், செயல்பட்டு வந்த என்டிஎஸ் சார்லஸ் தனது ஆதரவாளர்களுடன் அக் கட்சியில் இருந்து விலகி தவெக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் அவருக்கு அமைச்சர் செங்கோட்டையன், தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீ நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


என்டிஎஸ் சார்லஸ் 42 வருட அரசியல் வாழ்க்கை கொண்டவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் 1991ல் கூட்டுறவு வங்கி தலைவராகவும்,, 1996ல் ஒன்றிய கவுன்சிலராகவும் செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *