திருச்சி மாவட்டத்தில் ரூ.15.49 கோடியில் தூர்வாரும் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

2026-27-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள்,
வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 1161 பணிகள் 5954.937 கி.மீ.
நீளத்திற்கு ரூ.125.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஆறுகள்,கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியவற்றில் 112 பணிகள் 314.34 கி.மீ.நீளத்திற்கு ரூ.15.49 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேற்காணும் தூர்வாரும் பணிகள் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம், திருச்சி
வாயிலாக 62 பணிகள் 226.53 கி.மீ.நீளத்திற்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டம், திருச்சி வாயிலாக 50 பணிகள் 87.810 கி.மீ.
நீளத்திற்கு ரூ.6.25 கோடி மதிப்பீட்டிலும் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இலால்குடி வட்டத்தில் கோவண்டாக்குறிச்சி, முள்ளால் மற்றும் விரகாலூர் கிராமத்தில் நந்தியாறு, புள்ளம்பாடி கால்வாய்களில்
நடைபெறும் தூர்வாரும் பணிகளை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்
வே.சரவணன்,இ.ஆ.ப., இன்று (20.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டு இப்பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள நீர்வளத்துறை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 112 பணிகளில் இதுநாள்
வரை 95 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முடிவடையும் தருவாயில்
உள்ளன.

வருகிற ஜீன் மாதம் மேட்டூர் அணை திறப்பிற்கு முன் அனைத்து
பணிகளும் நிறைவடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் இந்த வாய்க்கால்கள் முழுமையாக
தூர்வாரப்படுவதால் சுமார் 8835 ஏக்கர் பாசன வசதி பெறும் இந்த ஆய்வின் போது நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் அ.நித்தியானந்தன், உதவி செயற்பொறியாளர் திரு.வே.தினேஷ்கண்ணண், உதவி பொறியாளர்கள் ஜ.ஹரிகிருஷ்ணபிரபு, எம்.ஜி.ரேகா ஆகியோர் உடன் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *