திருவொற்றியூரில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் திருவொற்றியூர் போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சார பழுது நீக்கி சரி செய்து மின் வினியோகம்.


திருவொற்றியூர் அஜாக்ஸ் மின்வாரிய அலுவலகத்தில் இரவு நேரங்களில் மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் முறையாக தகவல் அளிக்காத நிலையில் பெண்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி நேற்று முன்தினம் இரவு 3 மணி வரை மின்சார பழுது நீக்கப்பட்டு நடவடிக்கை.
திருவொற்றியூர் அஜாக்ஸ் மின்வாரியர் அலுவலகத்திற்கு உட்பட்ட எண்ணூர் பாரதியார் நகர் பாரத் நகர் ஸ்ரீரங்கம் நியூ டவுன் விம்கோ நகர் மாணிக்க நகர் அஜாக்ஸ் மேற்கு மாட வீதி பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மிகுந்த சிரமம் அடைந்து ஒரு சிலர் பெண்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து ஊழியர்களிடம் விசாரித்த போது முறையான தகவல் அளிக்கவில்லை என்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது போனை எடுக்காத நிலையில் பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக பதிலளிக்காததை கண்டித்து அனைவரும் மின்வாரிய அலுவலக வாசலில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனை அடுத்து தமிழக வெற்றி கழக புகார் அளிக்கும் செல்போன் நம்பருக்கு புகார் அளித்த நிலையில் உடனடியாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பின்னர் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களிடம் மின்வெட்டு குறித்து கேட்டறிந்து அதிகாரிகளின் தொடர்பு கொண்டு விடுப்பில் இருக்கும் ஊழியர்களை வரவழைத்து மூன்று மணி வரை மின்சார பழுதினை நீக்கி சரி செய்தனர் இதனால் இரவு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *