கரூர் செய்தியாளர் மரியான் பாபு
மாநில அளவில் சிறப்பிடம்..
கரூர் மாவட்டம் வெண்ணமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்றது.தேர்வை பள்ளியைச் சேர்ந்த 236.மாணவ , மாணவியர்கள் எழுதினார்கள். இத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் M.I.ராகுல் எனும் மாணவன் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடமும்
கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளிக்கு மகத்தான ஒரு சாதனையாகும்.
S.தீபக் ராஜ் என்ற மாணவன் 495/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.S.D.கந்த கிருத்திகா எனும் மாணவி 493/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.மேலும் ஏழு மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேற்கண்ட மாணவச் செல்வங்களுக்குப் பள்ளியின் செயலாளர் K. பெரியசாமி, தாளாளர் K. பாண்டியன் ,முதல்வர் V. பழனியப்பன் MSc, MPhil, BEd., தேசிய நல்லாசிரியர் , பெற்றோர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.