தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே அமைந்துள்ள மதுபான கடை அகற்றக்கோரி தாராபுரம் கோட்டாட்சியர் மனு.
திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தாலுகா குண்டடம் கிராமத்தில் அரசு மதுபான கடை எண்: 3455 இயங்கி வருகிறது.
இந்த மதுபான கடை அரசு அறிவித்துள்ளபடி கிறிஸ்துவ வழிபாட்டுத்தலத்திற்கு அருகிலும், கிறிஸ்துவ பள்ளி (CSI) அருகில் உள்ளதாலும் வழிபாட்டுத்தளத்திற்கு வருபவர்களுக்கு மது பிரியர்களால் குடித்துவிட்டு போதையில் அவ்வப்போது பிரச்சனையில் ஈடுபடுவதால் பொது அமைதிக்கு சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால் கடைக்கு அருகில் பள்ளியும் உள்ளதால் குழந்தைகள் பள்ளிக்கு அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உள்ளது. ஆகவே தமிழக அரசு அறிவித்துள்ளபடி பொதுமக்களுக்கும் வழிபாட்டு தலங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதியும் திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தாலுக்கா. குண்டடம். புது நவக்கொம்பு என்ற இடத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை எண்:3455 கடையை அகற்ற தங்கள் நடவடிக்கை எடுக்கும்படி இன்று ஏர்முனை இளைஞர் அணி திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.