மன்னார்குடி., மே. 21

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ. சிபிஎம் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தில ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ,வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு , மத்திய அரசு தட்டுபாடுயில்லாமல் சிலிண்டர் வழங்கிட வலியுறுத்தியும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மன்னார்குடி பெரியார் சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *