காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுக ல இணைந்த மாமன்ற உறுப்பினர் மேயர் ஜெகன் சந்திப்பு.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி அமைத்தது இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது. இதனை அடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
வியாழக்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கீதா ஜீவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ். எடின்டா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இதனை அடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சந்திர போஸ் மே ஜெகன் பெரியசாமி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாமன்ற உறுப்பினர் சந்திர போஸுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். அப்போது மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் மேயர் ஜெகனிடம் தன்னுடைய வார்டுகளுக்கு சில பணிகள் நடைபெறாமல் உள்ளது அந்தப் பணிகளை விரைந்து முடித்து தருமாறு கோரிக்கை வைத்தார்
அதற்கு மேயர்ஜெகன் உங்களுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன். போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் ஆகியோர் இருந்தனர்.